ஸ்ரீசடாரியின் முக்கியத்துவம்

வைணவ கோயில்களில் சேவிக்க வருபவர்களுக்கு  தீர்த்ததுடன் சடாரி சாதிப்பது வழக்கம்.அவ்வாறு சாதிப்பது ஏன்?

Nammazhwar

நம்மாழ்வார்

‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார்,வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருகுருகூரில் அவதரித்தார்.அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன்.பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அழும்,காரணம்,பூர்வ ஜென்ம கர்மத்தின் வினை,சடம் என்னும் வாயுவாய் சூழ்ந்துக்கொள்ளும்.

ஆனால் நம்மாழ்வார் சடம் என்ற வாயுவை தன்னை சூழ்ந்து கொள்ள விடாமல் கோபித்துக் கொண்டபடியால் ‘சடகோபன்’  என்று கொண்டாப்படுகிறார்.

sadagopan

ஸ்ரீசடாரி

ஸ்ரீசடாரி என்பது எவ்வாறு இருக்கும் என்றால்,ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் திருமாலின் திருவடிகள் பொறிக்கப்பட்டிருக்கும்.நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுகிறார்.ஸ்ரீசடாரிக்கு மற்றொரு பெயர்  ‘ஸ்ரீசடகோபம்’.

Leave a comment